மதுரை: நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜையில் எம்எல்ஏ.

4பார்த்தது
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த்தேக்க மேல்நிலை தொட்டி பழுதடைந்து இருந்தது புதிய நீர்த்தேக்க மேல்நிலைத் தொட்டி வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் நீர்த்தேக்க மேல்நிலை தொட்டி அமைப்பதற்கான பூமி பூஜையில் இன்று (ஜூலை. 5) சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமார் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். முன்னதாக உதயகுமாருக்கு கிராம மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் நிகழ்வினை தொடங்கி வைத்தார். இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பயனர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி