திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி வட்டாரத்தில் பெரும்பாலான பகுதிகள் மழையை எதிர்நோக்கி காத்திருக்கும் வறட்சியான பகுதிகளாகும் இந்த வரட்சியான மானாவாரி பகுதிகளில் ஆண்டுக்கு 500 முதல் 700 மில்லி மீட்டர் அளவு மட்டுமே மழை பெய்கிறது.
அதுவும் சீராக பெய்யவில்லை மழையின் அளவு நீர்ப்பாசன முறை மண்ணின் தன்மை பயிறு வளர்ச்சி திட்டம் சுற்றுச்சூழல், சமுதாய நிலை அகியவற்றை கொண்டு இந்த இடத்திற்கான விவசாய வருமானம் நிர்ணயிக்கப்படுகிறது.
கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சியை திட்டம் மற்றும் மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் ஆகியவற்றின் கீழ் தோட்டக்கலை சார்பில் எலுமிச்சை நெல்லி சீதா நாவல் சப்போட்டா மாதுளை போன்ற பல்லாண்டு செடிகளில் சிலவற்றை உள்ளடக்கிய தொகுப்புகளை விவசாயிகளுக்கு மாநில விலையில் பெற்றுக் கொள்ளலாம் பயிரிட ஆர்வம் உள்ள விவசாயிகள் கள்ளிக்குடி வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை கொண்டு வந்து நேரிலும் பெற்றுக் கொள்ளலாம் என்று உதவி இயக்குனர் பிரிஸ்கோ பிளேவியா தெரிவித்தார்.