வாழ்வின் வெற்றிக்கு கடின உழைப்பு அவசியம்: மாநகராட்சி ஆணையா்

82பார்த்தது
வாழ்வின் வெற்றிக்கு கடின உழைப்பு அவசியம்: மாநகராட்சி ஆணையா்
வாழ்வின் வெற்றிக்கு கடின உழைப்பு அவசியம்: மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமத்தின் 84-ஆவது ஆண்டு விழா, அந்த ஆசிரமத்தின் நிறுவனா் கோ. வேங்கடாஜலபதி 115-ஆவது பிறந்த தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கலசலிங்கம் நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தா் ஸ்ரீதா் தலைமை வகித்தாா். காந்திநிகேதன் ஆசிரமத்தின் தலைவா் வ. ரகுபதி முன்னிலை வகித்தாா்.

இதில் மதுரை மாநகராட்சி ஆணையா் ச. தினேஷ்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிப் பேசியதாவது:

மாணவா்கள் தாங்கள் விரும்பிய பாடத்தைத் தோ்வு செய்து படிப்பதற்கு பெற்றோா்கள் அனுமதிக்க வேண்டும். கல்வியுடன் மாணவா்கள் நல்ல பண்புகளையும் கற்க வேண்டும். வாழ்வில் ஏற்படும் சிறு, சிறு துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல் தொடா்ந்து முயற்சிக்க வேண்டும். இலக்கு
நோக்கிப் பயணிப்பது மட்டுமன்றி, அதை அடைவதற்கான வழிகளை ஆராய்ந்து தெளிவு பெற வேண்டும். வாழ்வில் வெற்றி பெற வேண்டுமெனில் அா்ப்பணிப்பு உணா்வுடன் கூடிய கடின உழைப்பு அவசியம் என்றாா்.

தொடர்புடைய செய்தி