சுங்கச்சாவடியை அகற்றக் கோரி 'பந்த்' ஆர். பி. உதயகுமார் உள்பட 520 பேர் கைது
மதுரை அருகே கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக் கோரி, திருமங்கலத்தில் இன்று (ஜூலை 30) முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினரும், சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக்குழு தலைமையில் பொதுமக்களும் 'பந்த்' போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 520 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், சுங்கச்சாவடியை முற்றுகையிட வந்த சுங்கச்சாவடி எதிர்ப்பு போராட்டக் குழுவினரையும், பொதுமக்களையும் போலீஸார், கைது செய்து அழைத்துச் சென்றனர். ஒட்டுமொத்தமாக கப்பலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட முயன்ற 520 பேரை போலீஸார் கைதுசெய்தனர். மேலும், பலரை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.