மதுரை மாவட்டத்தில் பொது வினியோக திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் வருகிற 14-ந் தேதி குடிமைப்பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த முகாமில் புதிய ரேஷன் அட்டை, குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், நகல் அட்டை கோருதல், கைப்பேசி எண் பதிவு போன்ற குறைகளை நிவர்த்தி செய்யலாம்.