மேலூர் அருகே அம்மன் கோவிலில் வழிபாடு.

53பார்த்தது
மேலூர் அருகே அம்மன் கோவிலில் வழிபாடு.
ராணிபேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா திருமாற்பேறு கிராமத்தை சேர்ந்த வெங்கட்டா வகையறாவை சேர்ந்த 100 குடும்பத்தினர் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இவர்களது குல தெய்வமான மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள சென்னகரம்பட்டி அம்மச்சி அம்மன் கோவிலுக்கு ஆடி மாதம் வருடத்திற்கு இரண்டு முறை வந்து அம்மனுக்கு எருவாட்டி மூலம் சக்கரை பொங்கல் வைத்து மாவிளக்கு, சுண்டல், கூழ், கொழுக்கட்டை, காய்கறி வகைகள் சாமிக்கு படையல் படைத்து வழிபாடு செய்தனர். சந்தனகாப்பு, வளையல் மாலை, இவர்களே அம்மனுக்கு பட்டுச்சோலை நெசவு செய்து அம்மனுக்குசாத்தி வழிபட்டனர். 20 க்கும் மேற்பட்ட பெண்கள் மொட்டை போட்டு நேர்த்தி கடனை செலுத்தினர். இவர்களது குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால் அம்மச்சி அம்மன் என்று முதலில் பெயர் சூட்டுவார்கள்.
இந்த குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள், குடும்பத்தினர்கள் வெளிநாட்டில் வசித்து வந்தாலும் இந்த ஆடி மாத திருவிழாவிற்கு அனைவரும் ஒன்று கூடி விடுவார்கள்.

தொடர்புடைய செய்தி