அழகர் கோவில் சுந்தர்ராசா உயர்நிலைப் பள்ளியில் துவங்கிய மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சுந்தர்ராசா உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட வருவாய் அளவிலான 14 வயது 17 வயது 19 வயது உட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால் போட்டி இன்று முதல் துவங்கி 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்காக பள்ளியில் புதிதாக துவக்கப்பட்ட வாலிபால் மைதானத்தில் போட்டி துவங்கியது. இதனை மதுரை மண்டல அறநிலையத்துறையின் இணை ஆணையர் செல்லத்துரை மற்றும் கோவில் துணை ஆணையர் ராமசாமி மேலூர் மாவட்ட கல்வி அலுவலர் முத்துலட்சுமி ஆகியோர் தலைமையில் துவங்கியது.
இந்த போட்டியில் 42 மகளிர் அணிகள் மட்டும் 42 ஆடவர் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறப்பு கோப்பைகள் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது.