மதுரை அருகே உள்ள அழகர் கோவில் மலைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் அடிவாரத்திலிருந்து (மலைகேட்) சோலைமலை மண்டபம். அருள்மிகு முருகன் திருக்கோயில் வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், எதிர்வரும் 09. 09. 2024 முதல் 14. 09. 2024 முடிய ( திங்கள் முதல் சனிக்கிழமை வரை ) ஆகிய நாட்களுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கு செல்வதற்கு அனுமதி இல்லை என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும், சோலைமலை முருகன் திருக்கோயில் மற்றும் இராக்காயி அம்மன் திருக்கோயில்களில் வழக்கம் போல் தினசரி பூஜைகள் நடைபெறும், பக்தர்கள் நடைபாதையாக சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.