மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே காடம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கருங்குட்டு அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்திற்கு புனித நீர் ஊற்றினர். அப்போது வானில் கருடன் வட்டமிட்டது பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.