கோவிலுக்கு உதவிய வெளிநாடு வாழ் தமிழர்கள்

756பார்த்தது
கோவிலுக்கு உதவிய வெளிநாடு வாழ் தமிழர்கள்
கோவில் கட்டுவதற்காக 18 ஆண்டுகளாக சேமித்த 30 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவிய துபாய் வாழ் தமிழர்களுக்கு கிராம மக்கள் மரியாதை

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புதிதாக கட்டுவதற்காக துபாய் வாழ் தமிழர்கள் 18 ஆண்டுகளாக சேமித்த பணம் 30 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்தனர். கடந்த ஆண்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று காணப்படை அய்யனார் சுவாமியை தரிசித்து சென்றனர். இவர்களை கௌரவிக்கும் விதமாக ஊர் கிராம மக்கள் சேர்ந்து துபாய் வாழ் தமிழர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி