அப்பன் திருப்பதி அருகே சாலை விபத்து - ஒருவர் படுகாயம்
மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி அருகே கடச்சனேந்தல் பேருந்து நிறுத்தம் சாலையில் சாலையைக் கடக்க முயன்ற 74 வயதுடைய முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தானது. இந்த விபத்தில் முதியவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து இன்று அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.