மேலூர் அருகே கைக்குழந்தையுடன் தாய் மாயம் - போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சாலக்கிப்பட்டி கிராமத்தில் வீட்டை விட்டு நான்கு வயது கைக்குழந்தையுடன் வெளியே சென்ற தாய் மாயமாகியுள்ளார். இது குறித்து அவரது கணவர் மேலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கைக்குழந்தையுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.