மதுரை மாவட்டம் அழகர் கோவில் அருகே காதக்கிணற்றைச் சேர்ந்த தனியார் வங்கி மேலாளரின் 15 வயது மகன், தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 'பாடங்கள் அதிகமாக இருப்பதால் என்னால் படிக்க முடியவில்லை' என பெற்றோரிடம் பலமுறை கூறி வந்த நிலையில் மனஅழுத்தத்திற்கு ஆளாகி, அவரது அறையிலேயே தூங்க ஆரம்பித்தார். நேற்றுமுன்தினம் (ஜூன் 8) பெற்றோர் கோவிலுக்குச் சென்ற நிலையில் அறையில் சேலையால் தூங்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இறப்பு குறித்து அப்பா திருப்பதி போலீசாரிடம் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.