மேலூர்: சாலையை அகலப்படுத்தும் பணி தீவிரம்

77பார்த்தது
மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து சிவகங்கை வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக குறிப்பிட்ட தூரம் வரை தனித்தனியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மேலூர் அம்பலகாரன்பட்டி விலக்கிலிருந்து ஆட்டுக்குளம் விலக்கு வரையிலான பணிகள் இன்று (டிச. 16) துவங்கி உள்ளது. இதற்காக சாலை ஓரங்களில் இருந்த மரங்களை வேருடன் அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி