மேலூர்: வழக்கறிஞரை பாராட்டிய காவல் துறையினர்

85பார்த்தது
மேலூர்: வழக்கறிஞரை பாராட்டிய காவல் துறையினர்
மதுரை மாவட்டம் இலங்கிப்பட்டியைச் சேர்ந்த கமலம் (48) என்பவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் (ஜூன். 6) இலங்கிப்பட்டியிலிருந்து நயத்தான்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது திருவாதவூர் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் தன் கையில் இருந்த மணி பரிசை கீழே தவற விட்டு விட்டார்.

இதனை அந்த வழியாக வந்த ஆமூரைச் சேர்ந்த பிரபாகரன் (45) என்ற வழக்கறிஞர் அந்த மணி பர்ஸை எடுத்து அப்படியே மேலூர் காவல் நிலையம் வந்து நிலைய பாரா காவலர் கண்ணன் (845) வசம் ஒப்படைத்து விட்டார். உடனே அவர் அதிலிருந்த ஆவணங்களை வைத்து உரியவருக்கு தகவல் தெரிவித்து, அதன் உரிமையாளரை காவல் நிலையம் வரவழைத்து அந்த மணி பர்ஸை வழக்கறிஞர் பிரபாகரனிடம் கொடுத்து சார்பு ஆய்வாளர் ஆனந்தஜோதி, சிறப்பு சார்பு ஆய்வாளர் ஜெயந்தன் மற்றும் காவலர் கண்ணன் (845) இவர்கள் முன்னிலையில் உரியவரிடம் எடுத்தவரே நேரடியாக ஒப்படைத்தார்‌.

அதன் உரிமையாளர் அதிலிருந்த பணம் ரூபாய் 34, 000 மற்றும் இதர ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்து பெற்றுக் கொண்டார். வழக்கறிஞரை பாராட்டும் வண்ணமாக காவல் சார்பு ஆய்வாளர் ஆனந்த ஜோதி அவர்கள் துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர்களின் அறிவுறுத்தலின் படி அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.

தொடர்புடைய செய்தி