மதுரை மாவட்டம் மேலூரில் முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் நலச் சங்கம் சார்பில், அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான அடுத்த கட்ட போராட்டமாக ஜன. 7ல் நரசிங்கம்பட்டியில் இருந்து நடை பயணமாக மதுரை சென்று தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என இன்று (டிச. 28) நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அ. வல்லாளப்பட்டி, கிடாரிபட்டி, மாங்குளம் உட்பட பல்வேறு கிராமங்களில் மக்களிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆதரவு திரட்டப்பட்டது.