மேலூர்: 550 பசு மாடுகள் கலந்து கொண்ட கோ பூஜை

56பார்த்தது
மேலூர்: 550 பசு மாடுகள் கலந்து கொண்ட கோ பூஜை
மதுரை மாவட்டம் மேலூர் யூனியன் அலுவலகம் எதிரே உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்று வருகிறது. 23ம் தேதி ஐயப்பனுக்கு ஆராதனை நிகழ்ச்சி, 24ல் திருவிளக்கு பூஜையும் நேற்று முன்தினம் சிறப்பு அன்னதானம் நடைபெற்று, இரவில் சுவாமி புஷ்ப ரத ஊர்வலம் நடைபெற்றது. நேற்று (டிச. 26) கணபதி ஹோமத்துடன், 550 பசுமாடுகள் கலந்துகொண்ட கோ பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. 

மாலை 6 மணி அளவில் லட்சார்ச்சனை மற்றும் பக்தர்கள் பஜனை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மேலூர் கிளை ஸ்ரீ ஐயப்ப பக்தர்கள், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி