மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கோயில் உள்ளது. இந்த ஆண்டு
வைகாசி மாத விழா நடைபெற்று வருகிறது.
ஜூன் 4ல் சுவாமி மேலூருக்கு எழுந்தருளிய மாங்கொட்டை திருவிழா நடைபெற்றது. முக்கிய நிகழ்வாக திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது.
இந்நிலையில் இன்று (ஜூன். 8)காலை தேரோட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.