மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் திருக்கோயிலில் இன்று (23.12.2024) காலை இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பசி அகற்கும் திருவிழாவை முன்னிட்டு திருமறைநாதர், வேதநாயகி அம்பாள் தனித்தனி அஷ்டமி சப்பரங்களிலும், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகன், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் தனித்தனியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.