மேலூர்: அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம்

79பார்த்தது
மேலூர்: அதிமுகவினரின் திண்ணை பிரச்சாரம்
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி மேலூர் செக்கடியில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் மாபெரும் திண்ணைப் பிரச்சாரம் இன்று (மார்ச். 28) நடைபெற்றது. மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ கே. தமிழரசன் தலைமை தாங்கி துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் மேலூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் கே. பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி தெற்கு ஒன்றிய கழக செயலாளரும், முன்னாள் யூனியன் சேர்மன் பி. வெற்றிச்செழியன், மேலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.சி. பொன்ராஜேந்திரன், கொட்டாம்பட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் குலோத்துங்கன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர் மலைச்சாமி, மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் தவபாண்டி, நாகசுப்பிரமணியன், நகர்மன்ற உறுப்பினர் திவாகர், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் விஷ்ணுவேல், நகர் பொருளாளர் கந்தசாமி, நகர் மகளிர் அணி செயலாளர் விஜயா அர்ச்சுணன், நகர் மீனவர் அணி செயலாளர் சேகர், மேலூர் தெற்கு ஒன்றிய அம்மா பேரவை துணைச் செயலாளர் உதயசங்கர், ராமகிருஷ்ணன், மைதீன், பிரகாஷ், ரத்தினம், குணாநிதி, பாலாஜி, பகுருதீன், சுரேஷ், கார்த்திகேயன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள்பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி