கடலூரில் இருந்து மதுரை நோக்கி சரக்குகளை ஏற்றிக்கொண்டு, நேற்று (டிச. 28) அதிகாலை லாரி ஒன்று மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அருகே வந்து கொண்டிருந்தது. டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால், லாரி கட்டுப்பாட்டில் இழந்து ரோட்டோர கால்வாயில் பாய்ந்தது. இதில் டிரைவர் லேசான காயங்களுடன் தப்பினார். இதனைத் தொடர்ந்து நான்கு வழிச்சாலை மீட்பு வாகனங்கள் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.