மதுரை: "விண்ணில் விஞ்ஞானத் தேடல்"நிகழ்வில் அமைச்சர்கள்

80பார்த்தது
மதுரை: "விண்ணில் விஞ்ஞானத் தேடல்"நிகழ்வில் அமைச்சர்கள்
மதுரை கிடாரிப்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகுதியுள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான ஐந்து நாள் குளிர்கால உண்டு உறைவிடமுகாம் "விண்ணில் விஞ்ஞானத் தேடல்" என்ற தலைப்பில் இன்று (டிச. 29) நடைபெற்றது. 

இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்களும் இணைந்து முகாமில் பங்கேற்று மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, உரையாடி வாழ்த்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி