மதுரை அருகே உள்ள அழகர் கோயிலில் பள்ளிகள் தொடர் விடுமுறையையொட்டி
சுற்றுலா பயணிகளும், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமான பக்தர்களும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் குவிந்த வண்ணமாக இருந்தனர். இதில் நேற்று (டிச. 29) காலை முதல் மாலை வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற நூபுர கங்கை தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து வரும் வழியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் வித்தக விநாயக
ர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மற்றும் வேல் சன்னதியில் பூஜைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராத
னைகளும் நடந்தது. மேலும் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள், மற்றும் கோயில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதிகளில், பக்தர்கள் வரிசையாக சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.