மத்திய அரசுக்கு எதிராக இடதுசாரி அமைப்புகள் மறியல் போராட்டம்
மதுரை ஒத்தக்கடையில் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி அமைப்புகள் சார்பில் மதுரை மேலூர் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்கு முன்பு முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை ஒத்தக்கடை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.