தனியாமங்கலத்தில் துணை மின் நிலையம் திறப்பு

3810பார்த்தது
தனியாமங்கலத்தில் விகிதாச்சார அறிமுக துணை மின் நிலையத்தினை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைப்பு. எரிசக்தி துறை சார்பில் 2003 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையம் மற்றும் துணை மின் நிலையங்களில் திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று திறந்து வைத்தார் அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் விகிதாச்சார அறிமுக துணை மின் நிலையத்தினை காணொளி காட்சி மூலம் மு க ஸ்டாலின் முதல்வர் திறந்து வைத்தார் இதனை அடுத்து மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரதவுஸ் பாத்திமா ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடைய செய்தி