மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரிய மீன்பிடி திருவிழா - ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அய்வத்தான்பட்டி கிராமத்தில் உள்ள அய்வத்தான் கண்மாயில் பாரம்பரிய மீன்பிடி திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான அதிகாலை முதலே வந்திருந்து நாட்டுவகை மீன்களை போட்டி போட்டு பிடித்து சென்றனர். மீன்பிடி திருவிழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் தலா 2 கிலோ முதல் 5 கிலோ வரை மீன்களை பிடித்து சென்றனர்.
விவசாயம் செழித்து மழை பெய்ய வேண்டி ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.