முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

1071பார்த்தது
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
மேலூர் அரசு கலை கல்லூரி முன்னாள் மாணவர்கள் 27ஆண்டுக்கு பின் சந்திப்பு மேலூர் அரசு கலைக்கல்லூரியில் கடந்த 1993 - 96 ஆகிய கல்வி ஆண்டில் ஆங்கில இலக்கிய பட்ட படிப்பு படித்த 40 கல்லூரி மாணவ மாணவிகள் 27 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக மேலூர் அரசு கலைக் கல்லூரியில் சந்தித்து தங்களது நினைவுகளை தங்களது குடும்பங்களுடன் சந்தோஷமாக பங்கேற்று பகிர்ந்து கொண்டனர். உடன் தங்களுக்கு கல்வி கற்றுகொடுத்த ஆங்கில இலக்கிய பேராசிரியர் நடராஜன், லூர்துராஜ் ஆகியோர்கலந்து கொண்டனர். அவர்களுக்கு கல்லூரி நண்பர்கள் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். இக் கல்லூரியில் படித்தவர்கள் இன்று குற்றாலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக குமார், சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராக மோகன், ஏரியூர் அரசு பள்ளி ஆசிரியராக மாதேஸ்வரன், ராமநாதபுரத்தில் ஆசிரியாரக ஜெலினா, திருப்பத்தூரில் ஆசிரியராக உமா, கிடாரிபட்டியில் ஆசிரியராக யமுனா, மதுரை உயர்நீதிமன்றத்தில் சூப்பிரண்டாக பெருமாள், மேலூர் பிஜேபி பிரமுகர்கள் தசரதன், ரகு, மற்றவர்கள் தொழிலதிபர்களாகவும், தனியார் நிறுவனத்திலும் பணிபுரிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி