அழகர்கோவில் கள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா! நாளை நடக்கிறது!!
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தெப்ப திருவிழா நேற்று தொடங்கியது. இன்று 23ம் தேதி இக் கோவிலில் மாலை 4. 32 மணிக்கு மேல் 5. 20 மணிக் குள் கஜேந்திர மோட்ச திரு விழா நடைபெறுகிறது. நாளை 24-ந் தேதி தெப்ப திருவிழாநடைபெறுகிறது.
இதையொட்டி
அன்று காலை 7. 30 மணிக்கு மேல் 8. 15 மணிக்குள் ஆஸ்தானத்தை விட்டு பல்லக்கில் சகல பரிவாரங்களுடன்கோவிலில்இருந்து சுவாமி புறப்படும். பின்னர் கள்ளழகர்பெருமாள் பொய்கைகரைப்பட்டியில் உள்ள கோவிலுக்குரிய தெப்பகுளத்தில் கிழக்கு பகுதியில் உள்ள மண்டபத்தில் காலை 10: 30 மணிக்கு மேல் 12. 00 மணிக்குள்
எழுந்தருளுகிறார். பின்னர் அன்று மாலையில் சுவாமி வந்த வழியாகவே சென்று மீண்டும் இருப்பிடம் சேரு கிறார்.
இந்தவிழாஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலை வர் வெங்கடாசலம்,
துணை அணையர் கலைவாணன் மற்றும் கோவில் கண்காணிப்பாளர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.