பேருந்துக்குள் பெய்த மழை: வைரல் வீடியோ

1073பார்த்தது
வங்ககடலில் நிலவும் கீழ் அடுக்கு வளிமண்டல சுழற்சி காரணமாக மதுரை நகரில் நேற்று (ஜூன் 6) இடி மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மழையால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல ஓடியது. இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் நகரிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் நோக்கி வழித்தடம் 75 நகர பேருந்து ஒன்று வந்துக்கொண்டிருந்தது.

அப்போது பேருந்தின் மேற்கூரை ஓட்டை ஏற்பட்டதால் அதில் இருந்து மழைநீர் ஒழுகிய நிலையில் பயணிகளுடன் பேருந்து சென்ற காட்சி வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி