மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முனியாண்டி கோவில் அருகில் வசிக்கும் சப்பானி (வயது 42) என்பவர் பெரிய ஊர் சேரி ஆற்றுப்பாலத்தின் அருகில் செல்போன் மூலம் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருந்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ரூ.16,962/- ரொக்கம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சப்பானி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.