மதுரை அரசு மருத்துவமனையில் ரூ. 12 கோடி மதிப்பிலான பே-வார்டு படுக்கை சிகிச்சை பிரிவு நடைபெற்று வருகிறது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளின் மருத்துவ பரிசோதனைகள், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. அதே நேரம் படுக்கை, குடிநீர், ஏசி உள்ளிட்ட வசதிகளுக்கு இந்த அறைக்கு மிக குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் இதுவரை ரூ. 1 கோடி 24 லட்சத்து 7600 வருவாய் கிடைத்துள்ளது.