மதுரை நகரம் - Madurai City

மதுரை: கடந்த 6 ஆண்டுகளில் 542 விபத்துகள்; 137 பேர் மரணம்

மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பொதுநலவழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை திண்டுக்கல் சாலையில் சமயநல்லூர் பகுதியில் நாள்தோறும் வாகனவிபத்துகள் அதிகளவில் நடைபெறுகின்றன. இதனைத் தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகி உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் மற்றும் மரியாக்ளேட் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சென்னையில் ஒரு அலுவலக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றதால் நேரில் ஆஜராக முடியவில்லை என அரசுதரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் நீதிமன்றம் உத்தரவிட்டும் நேரில் ஆஜராகாத மதுரை நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மீது நீதிமன்றாவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தது. மேலும் அவர் நாளை மறுநாள் ஆஜராகி தன்மீது ஏன் நீதிமன்றாவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் சமயநல்லூர் டிஎஸ்பி தரப்பில் 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளில் 542 விபத்துகள் ஏற்பட்டு 137 பேர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தப் பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததே விபத்துகளுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా