மதுரை: மழைநீரில் மூழ்கி மூச்சுத்திணறி பலி
மதுரை ஆரப்பாளையம் மேலப்பொன்னகரம் 3வது தெருவை சேர்ந்தவர் வாட்ச்மேன் மணவாளன் (70). மகள் கிரிஜா, பேத்தியுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் சில நாட்களாக பணிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தார். அக். 20ல் மகளும் பேத்தியும் தேனியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டனர். இந்நிலையில் அண்மையில் பெய்த கனமழையால் மணவாளனின் வீட்டிற்குள் மழைநீர் புகுந்தது. அதில் தவறி விழுந்து மூச்சுத்திணறி பலியானார். தேனிக்குச் சென்ற மகள் வந்து பார்த்தபோது தேங்கி இருந்த மழைநீரில் மணவாளன் மூழ்கி இறந்தது தெரிந்தது. இது குறித்து கரிமேடு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.