மதுரை நகரம் - Madurai City

மதுரை: இனிப்பு பலகாரம் செய்யும் தொழிற்சாலையில் ஆய்வு

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மதுரை மாவட்டத்தில் இருக்கக்கூடிய இனிப்பு பலகாரங்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜெயவீரபாண்டியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாங்கும் இனிப்பு, கார உணவுகள் செயற்கை நிறமிகள் இல்லாத பாக்கெட் உணவுகளில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி பார்த்து வாங்கவும். வாங்கப்படும் பொருட்களில் ஏதேனும் புகார் இருக்கும் பட்சத்தில் 94440-42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகாரை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


జగిత్యాల జిల్లా