2 கிலோ கஞ்சாவுடன் திரிந்த வாலிபர் கைது

1082பார்த்தது
2 கிலோ கஞ்சாவுடன் திரிந்த வாலிபர் கைது
மதுரை கீரைத்துறை பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் திரிந்த வாலிபர் போலீசாரிடம் சிக்கினார்.

மதுரை கீரைத்துறை காவல் உதவி ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் வில்லாபுரம் அகஸ்தியர் தெரு செல்லும் வழியாக சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற இளைஞரை பிடித்து சோதனை செய்தனர்.

இதில் அந்த இளைஞரிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், அவர் மதுரை வில்லாபுரத்தை சேர்ந்த முருகன்(32) எனத்தெரிந்தது. அவரை கீரைத்துறை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி