உலகச் சுற்றுச்சூழல் தினம் மற்றும் மரக்கன்று நடும் விழா!!

65பார்த்தது
மதுரை கோ. புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலகச் சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் ஷேக் நபி வரவேற்புரையாற்றினார். உதவித் தலைமையாசிரியர் ஜாகீர் உசேன் முன்னிலை வகித்தார்.

மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் மதுரை வடக்கு தாசில்தார் மஸ்தான் கனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எடுத்துரைத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டனர்.

துணை வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் ராமர், கிராம நிர்வாக அலுவலர் இருளாண்டி மற்றும் சுற்றுச்சூழல் சமூக ஆர்வலர் பாரதிதாசன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். தமிழாசிரியர் நூருல்லா நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியை தமிழாசிரியர் தௌபிக் ராஜா தொகுத்து வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி