மதுரை: முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு; டிடிவி தினகரன் பேட்டி

61பார்த்தது
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மதுரை புறநகர் மாவட்டம் கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டமானது மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. அம்முக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து பேசியவர், 234 தொகுதிகளிலும் பணியாற்ற கழக நிர்வாகிகளின் கட்டமைப்பை சரிசெய்து வரும் தேர்தலில் மதுரையில் அம்முகவினர் போட்டியிட்டாலும், கூட்டணிக் கட்சி போட்டியிட்டாலும் தீயசக்தி திமுகவை வீழ்த்த திறம்பட செயல்பட கலந்து ஆலோசனை செய்து வருகிறோம் என்றார். 

மதுரைக்கு வந்த முதல்வரால் என்ன நடந்தது? அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறியது தான் மிச்சம்! சாக்கடையை துணியை வைத்து மூடியது தான்! 2026 தேர்தலில் பாஜக கூட்டணியில் தமிழகத்தில் வெற்றி பெறுவோம். கலைஞர் காலத்திலே 10 ஆண்டுகாலம் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் தத்தளித்து நிலையில் பாஜகவை காரணம் காட்டி ஸ்டாலின் இன்றைக்கு ஆட்சிக்கு வந்துள்ளார். சிறுபான்மை மக்கள் உட்பட அனைவரும் திமுகவின் ஆட்சியை புரிந்துகொண்டார்கள். 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார். மேலும், பிஜேபி கூட்டணியையும், எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறிவருவது பயத்தின் வெளிப்பாடு என்றார்.

தொடர்புடைய செய்தி