தெற்கு வாசலில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

71பார்த்தது
தெற்கு வாசலில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.
மதுரை தெற்கு வாசல் பகுதியில் வைகாசி மாத அமாவாசை பூஜை நடைபெற்றது.

மதுரை தெற்கு வாசல் காய்கறிகள் மார்க்கெட் பகுதியில் உள்ள அருள்மிகு ஶ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் மாதந்தோறும் ஶ்ரீ முனீஸ்வரர் அறக்கட்டளை சார்பில் அமாவாசை அன்று மதியம் 1. 30 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் ஆராதனைகள் செய்த பிறகு பக்தர்களுக்கு கற்கண்டு சாதம், சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவை வழங்கிய பின்னர் சுமார் 10 மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி, பலசரக்கு, மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பைகள் வழங்கப்படுவது வழக்கம்.

அதனடிப்படையில் இன்று மதியம் சிறப்பு பூஜைகள் நடந்து அன்னதானம் வழங்கி நலத்திட்ட உதவிகளை முனீஸ்வரர் அறக்கட்டளையை சேர்ந்த நிர்வாகிகள் வழங்கினார்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி