பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம்; மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

69பார்த்தது
பூங்காவில் கழிவு நீரேற்று நிலையம்; மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
மதுரையைச் சேர்ந்த நவநீதன், வளையாபதி, தங்கதுரை தெறிமுத்து, ரமேஷ், ராஜகோபால் ஆகியோர் கூட்டாக தாக்கல் செய்த பொது நல மனு:உத்தங்குடி பகுதியில் பொன்மணித் தோட்டம் உள்ளது. அதில், பொதுமக்கள், சிறுவர்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைப்பதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. 

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி தரப்பில் அந்தப் பூங்காவுக்குள் புதைசாக்கடை கழிவுநீரேற்று நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், இந்தப் பகுதி குழந்தைகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். புதைசாக்கடை உந்துநிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

ஆகவே, உத்தங்குடி பொன்மணித் தோட்ட பூங்காவுக்குள் புதைசாக்கடை கழிவுநீரேற்று நிலையத்தை அமைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மனு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.

தொடர்புடைய செய்தி