தொடர்ந்து அதிகரிக்கும் காய்கறி விலை

51பார்த்தது
தொடர்ந்து அதிகரிக்கும் காய்கறி விலை
தொடர்ந்து அதிகரிக்கும் காய்கறி விலை

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு தொடர்ந்து காய்கறி வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். வரத்து குறைவால் இன்று தக்காளி மொத்த விலையில் 25 ரூபாய்க்கும் சில்லறை விலையில் கிலோ 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. மேலும் கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும் இது போன்ற பல்வேறு காய்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

பல்வேறு பகுதியில் மழை பெய்து வருவதால் காய்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் காய்கறி விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகளாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி