டாக்டர் சரவணன் தாயாருக்கு அஞ்சலி

68பார்த்தது
அதிமுக மருத்துவரணி இணைச் செயலாளரும் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தாயார் பா. அங்கம்மாள் அவர்கள் 05. 06. 2024 மாலை திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக மதுரை நரிமேட்டில் உள்ள சரவணா மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் எடப்பாடியார் டாக்டர் சரவணனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் கழகப் பொதுச்செயளாலர் எடப்பாடியார் வெளியிட்ட இரங்கல் செய்தியில் டாக்டர் சரவணன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். திருமதி அங்கம்மாள் அவர்களின் ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற இறைவனை வேண்டுகிறேன் என்று இரங்கல் செய்தியை வெளியிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு , ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ராஜேந்திர பாலாஜி , ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி