கண்கவரும் மின்னொளியில் திருமலை நாயக்கர் மகால்.

85பார்த்தது
கண்கவரும் மின்னொளியில் திருமலை நாயக்கர் மகால்.
மதுரை திருமலை நாயக்கர் மகாலில் தற்போது சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஒளிரும் திருமலை நாயக்கர் அரண்மனை மதுரை மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டது. சங்க காலப் பாண்டியரின் தலைநகராக விளங்கியது. பல்வேறு இலக்கியங்களும் வெளிநாட்டார்க் குறிப்புகளும் மதுரையின் சிறப்பினை எடுத்துக் கூறுகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தேர்தல் அறிக்கையில் பண்டைய மரபுச் சின்னங்கள் அவற்றின் தொன்மை மாறாமல் பேணிப் பாதுகாக்கப்படும் என்று அறிவித்தார். அதனடிப்படையில் திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் மராட்டா அரண்மனை, தரங்கம்பாடி டேனீஷ்கோட்டை ஆகிய வரலாற்றுச் சின்னங்களில் பாதுகாப்பு, மறு சீரமைப்பு பணிகள் ரூ. 16. 92 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன

மேலும், திருமலை நாயக்க அரண்மனை நாடகசாலை, பள்ளியறை பகுதிகளில் புனரமைப்பு, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மூன்று கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. திருமலை நாயக்கர் அரண்மனையில் மேற்குப்புறத்தில் கம்பிவேலி மற்றும் புல்வெளித்தளம் ரூ 61 இலட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனையின் தொன்மையை பாதுகாக்கும் வண்ணம் அனைத்துத் தளப்பகுதிகளிலும் மாதிரியான கற்கள் ரூ 3. 73 கோடி மதிப்பில் பதிக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி