ரசாயன பரிசோதனை அறிக்கைக்கு காலவரம்பு; உயர்நீதிமன்றம் உத்தரவு

84பார்த்தது
கொடைக்கானல் பாம்பார்புரம் மணி. இவரது காரில் ஆக. , 17 ல் கொடைக்கானல் போலீசார் சோதனை நடத்தினர். அதிலிருந்த 100 கிராம் போதை காளானை பறிமுதல் செய்ததாக வழக்கு பதிந்தனர். கைதான மணி உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
விசாரணை அதிகாரியிடமிருந்து மாதிரியை பெற்ற நாளிலிருந்து விதிகள்படி ரசாயன பரிசோதனை ஆய்வகம் சோதனை முடிவின் அறிக்கையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 15 நாட்களில், அதிகபட்சம் 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க கடமைப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஆகஸ்ட்டில் காளான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கீழமை நீதிமன்றத்திற்கு வரவில்லை.

மனுதாரருக்கு இடைக்கால ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. விதிகள்படி குறிப்பிட்ட காலவரம்பிற்குள் ரசாயன பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலர், சென்னை தடய அறிவியல் ஆய்வக இயக்குனர் உறுதிசெய்ய வேண்டும். காலவரம்பிற்குள் ரசாயன ஆய்வகம் அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால், குற்றம் சாட்டப்பட்ட நபர் கீழமை நீதிமன்றத்தில் மனு செய்யலாம். அந்நீதிமன்றம் விரைவாக பரிசோதனை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தும். தமிழகம் முழுவதும் அனைத்து வழக்குகளிலும் இந்நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி