சொக்கிகுளம் பகுதியில் பைக் ரேஸில் ஈடுபட்ட மூன்று பேர் கைது
மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட சொக்கிகுளம் பகுதியில் அவ்வ போது சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்டு வருவதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பைக் ரேஸில் ஈடுபட்டு கொண்டியிருந்த பீபீ குளம் பகுதியைச் சேர்ந்தவர் நீயா, மீனாட்சி சுந்தரம் மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை கைது செய்து அவரிடம் இருந்து இரண்டு பைக் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.