அழகர் கோயில் பூசாரி வீட்டில் பணம் திருட்டு

85பார்த்தது
அழகர் கோயில் பூசாரி வீட்டில் பணம் திருட்டு
அழகர் கோயில் பூசாரி வீட்டில் பணம் திருட்டு

மதுரை புதூர் மாதா கோயில் பின்புறம் வஉசி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் 51 இவர் அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோவில் பூசாரியாக உள்ளார். இந்த நிலையில் இவர் வீட்டில் வைத்திருந்த பித்தளைக் குடம் அதிலிருந்த ரூ 21, 500 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்று உள்ளனர்.

இது குறித்து புதூர் போலீஸில் சேதுராமன் புகார் அளித்தார் அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி