வழிப்பறிக்கு திட்டமிட்டிருந்த வாலிபர் கைது

550பார்த்தது
வழிப்பறிக்கு திட்டமிட்டிருந்த வாலிபர் கைது
கூடல் புதூரில், வழிப்பறிக்கு திட்டமிட்டிருந்த
வாலிபர் நேற்று கைது -
வாள் ஒன்று பறிமுதல்

கூடல்புதூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் புலிக்குட்டி அய்யனார். இவர், போலீசாருடன் ரோந்து பணியில் ஈடுபட்டியிருந்தார்.
அவரகள், கூடல் நகர் அகதிகள் முகாம் அருகே விநாயகர் கோவில் அருகே சென்றனர்.
அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற வாலிபர் ஒருவரை பிடித்தனர். அவரிடம் வாள் ஒன்று இருந்தது.
அதே பறிமுதல் செய்து அவரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் அகதிகள் முகாமை சேர்ந்த சிவக்குமார் மகன் பவித்ரன் 23.
என்று தெரியவந்தது.


அவரிடம் , போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர் விசாரணையில் , திறனுக்கு உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தன்னை தற்காத்துக் கொள்வதற்காகவும், அந்த பகுதியில் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் , அதனால் தன்னை பாதுகாத்துக்
கொள்ளவும், வழிப்பறி செய்யவும் வாள் வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்த வாளையும் பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி