கடந்த வாரம் மதுரை மாநகரில் இருந்து சென்ற அரசு பேருந்து ஒன்று ஒத்தக்கடை அருகே உள்ள அல்ட்ரா கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் மாணவர்கள் நின்று கொண்டிருந்த போது பேருந்தை மறித்துள்ளனர்.
அதனை கண்டு கொள்ளாமல் அரசு பேருந்து ஓட்டுனர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனால் பேருந்து ஏறுவதற்காக சில மாணவர்கள் கீழே விழுகும் அளவிற்கு வேகமாக ஓடி வந்துள்ளனர்.
இதனை பார்த்து பேருந்தில் பயணித்த பயணியான அமுதா என்ற பெண் அரசு பேருந்து ஓட்டுநரை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர்களுடைய வரிப்பணத்தில் தான் நீங்கள் சம்பளம் வாங்குகிறீர்கள் எனவும், உங்கள் பிள்ளைகளாக இருந்தால் இதுபோன்று நடுரோட்டில் விட்டுவிட்டு வருவீர்களா எனவும் கேள்வி எழுப்பினார்.
கொஞ்சமும் மனசாட்சியோடு நடந்து கொள்ளுங்கள் என ஓட்டுநரை பார்த்து கேள்வி எழுப்பியதோடு நடத்துனரிடமும் நேரடியாக சென்று கேள்வி எழுப்பிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் அந்தப் பெண் மாணவர்களை பார்த்து உங்களுடைய சக மாணவர்களை இதுபோன்ற அரசு பேருந்து ஏற்றாமல் வருகிறார்கள், நீங்கள் இவற்றை தட்டி கேட்க கூடாத என கேள்வி எழுப்பினார். இனிமேல் இதுபோன்று பள்ளி மாணவர்களை ஏற்றாமல் வராதீர்கள் என ஓட்டுனருக்கு அறிவுரை வழங்கினார்.
இதனை இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றது.