மதுரை மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்ட ரூ 1, 330 முதல் ரூ 3, 450 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இறந்தவர்களின் உடல்களை கட்டணம் இன்றி இலவசமாக எரியூட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி கூட்டத்தில் அனைத்து மாவட்ட உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உறுப்பினர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் இந்திராணி தெரிவித்தார்.