பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

62பார்த்தது
பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
சோழவந்தானில் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி உற்சாகம்.
இந்தியாவின் பிரதமராக
தொடர்ச்சியாக, மூன்றாவது முறை மோடி பதவி ஏற்றதை முன்னிட்டு , மதுரை கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜசிம்மன், ஆணைக்
கிணங்க சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில், பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னதாக, சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்து பூஜைகள் செய்தனர். பின்னர், பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தொடர்ந்து, பேருந்து நிலையம்
சின்ன கடைவீதி தென்கரை ஊராட்சி திருவேடகம், ஊராட்சி மேலக்கால் ஊராட்சி ஆகிய பகுதிகளில், பிரதமர் மோடி பதவி ஏற்றதை முன்னிட்டு, பட்டாசுகள் வெடித்து
பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில், பாஜகவின் மாவட்ட ஒன்றிய ஊராட்சி பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிர்வாகிகள் கதிர்வேல் அழகர்சாமி செல்வி ரமேஷ் காசிராஜன் கோபால் வேணு
கோபால் காத்தமுத்து
செல் கடை சிவா கவிதா கருப்பையா சேகர் பழனி
முத்து உட்பட
பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி