கோவில் திருவிழாவின் போது போலி நன்கொடை ரசீது மூலம்பணத்தை கையாடல் செய்த செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் போது பொதுமக்கள் பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும், கொடுத்த பணத்தை போலி ரசீது அடித்து கையாடல் செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சண்முகபிரியா மற்றும் அவரது உதவியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி தகுந்த ஆவணங்களுடன் ஆதாரங்களுடன் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும், காவல்த்துறையினருக்கும் புகார் மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் அறநிலையத்துறை செயல் அலுவலர் சண்முகபிரியாவை பணியிடை நீக்கம் செய்து உத்திரவிடப்பட்டுள்ளது.